குட்கா வழக்கு - ரூ 246 கோடி சொத்துக்கள் முடக்கம் - அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை

குட்கா வழக்கில் 246 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

Update: 2019-07-29 18:51 GMT
குட்கா வழக்கில் முதல் தகவல் அறிக்கையை சிபிஐ பதிவு செய்ததன் அடிப்படையில் அரசு அதிகாரிகள் உள்ளிட்டோரிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. 2013 முதல் தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் உற்பத்தி செய்து விநியோகம் செய்தவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து குட்கா உற்பத்தியாளரான மாதவராவ், சீனிவாச ராவ் உமாசங்கர் குப்தா ஆகியோர் 639 கோடியே 40 லட்சம் வரை வருவாய் ஈட்டியது தெரியவந்தது. இந்த பணத்தில், தமிழகம், ஆந்திரா, புதுச்சேரியில் பல்வேறு சொத்துக்களை வாங்கியதும் சேலம் உள்ளிட்ட நகரங்களில் பங்கு முதலீடும் செய்ததும் தெரிந்தது. இந்நிலையில், அவர்களின், 246 கோடி ரூபாய் மதிப்பிலான 174 அசையும் மற்றும் அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது .
Tags:    

மேலும் செய்திகள்