வேலூர் தேர்தல் - ஸ்டாலினின் சுற்றுப்பயண விவரம்
வேலூர் மக்களவை தேர்தலில், திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் மேற்கொள்ள உள்ள பிரசார சுற்றுப்பயணத்தின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.;
வேலூர் மக்களவை தேர்தலில், திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் மேற்கொள்ள உள்ள பிரசார சுற்றுப்பயணத்தின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. வேலூர் மக்களவை தேர்தலில், தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த்தை ஆதரித்து 2 கட்டங்களாக தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பிரசாரம் செய்கிறார்.
இதற்காக வேலூர் புறப்படும் ஸ்டாலின், நாளை துவங்கி, 28, 29 ஆகிய மூன்று நாட்கள் பிரசாரம் செய்கிறார். இதனையடுத்து, ஆகஸ்ட் மாதம் 1,2,3 ஆகிய மூன்று நாட்கள் அவர் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.