பொறியியல் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு குறைந்துள்ளது - அண்ணா பல்கலைக் கழக முன்னாள் துணை வேந்தர்

பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வில், இதுவரை 48 ஆயிரத்து 850 இடங்கள் நிரம்பியுள்ள நிலையில், இன்னும் ஒரு லட்சத்து 25 ஆயிரம் இடங்கள் காலியாக உள்ளன.

Update: 2019-07-23 10:01 GMT
பொறியியல் படிப்பு சேர்க்கைக்கான கலந்தாய்வு, ஆன்-லைன் வழியில் நடந்து வருகிறது. இதுவரை மூன்று கட்ட ஆன்லைன் கலந்தாய்வு முடிந்த நிலையில், மொத்தம் உள்ள ஒரு லட்சத்து 72 ஆயிரம் அரசு ஒதுக்கீட்டு இடங்களில், 47 ஆயிரத்து 850 இடங்கள் நிரம்பி உள்ளன. மாணவர்களுக்கு பொறியியல் படிப்பின் மீதான ஆர்வம் நாளுக்கு நாள் குறைந்து வருவதே இதற்கு காரணம் என கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். கட்டமைப்பு இல்லாத பொறியியல்  கல்லூரிகளை மூட வேண்டும் என முன்னாள் துணைவேந்தர் மற்றும் பேராசிரியர் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்