கர்நாடக அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை : மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு

கர்நாடக மாநிலத்தில், கனமழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கான நீர் வரத்து அதிகரித்துள்ளது.

Update: 2019-07-23 04:20 GMT
கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரண்டு அணைகளில் இருந்தும் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகின்றன. கடந்த 20 ஆம் தேதி வரை, இரண்டு அணைகளில் இருந்தும் விநாடிக்கு 8 ஆயிரத்து 300 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. பிலிகுண்டுலு வழியாக  ஒகேனக்கல் வரும் நீரின் அளவு விநாடிக்கு 5 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணைக்கு, நேற்று 213 கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு ஆயிரத்து 500 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக ஆயிரம்  கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்