திருச்சி அருங்காட்சியக சிலை திருட்டு வழக்கு : விசாரணையில் வெளியான தகவல்கள்...

சிலை திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட ராம் குமாரிடம் ரகசிய விசாரணையில் வழக்கில் தொடர்புடைய மற்ற 3 பேர் குறித்தும் மாயமான சிலைகள் குறித்தும் சில முக்கிய தகவல்கள் வெளியிட்டுள்ளதாக சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

Update: 2019-07-21 06:58 GMT
சிலை திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட ராம் குமாரிடம் ரகசிய விசாரணையில் வழக்கில் தொடர்புடைய மற்ற 3 பேர் குறித்தும் மாயமான சிலைகள் குறித்தும் சில முக்கிய தகவல்கள் வெளியிட்டுள்ளதாக சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். 

திருச்சியில் உள்ள ஒரு அருங்காட்சியகத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு 31 சிலைகள் மாயமானது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ராம்குமார் என்பவர் 10 ஆண்டுகளுக்கு பிறகு நேபாள எல்லை சோனாலி சோதனை சாவடியில் சிக்கினார். திருச்சி சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவரை 3 நாட்கள் நீதிமன்ற காவலில் எடுத்த சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார்,  ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில், வழக்கில் தொடர்புடைய மேலும் 3 பேர் குறித்தும், மாயமான சிலைகள் குறித்தும் சில முக்கிய தகவல்கள் வெளிவந்துள்ளதாக சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ரகசிய விசாரணைக்கு பிறகு ராம்குமார் மீண்டும் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். 
Tags:    

மேலும் செய்திகள்