சட்டப் பேரவையில் ராமசாமி படையாச்சி உருவப்படம் : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார்

தமிழக சட்டப் பேரவையில் ராமசாமி படையாச்சி உருவப் படத்தை வரும் 19 ஆம் தேதி முதலமைச்சர் திறந்துவைக்க உள்ளதாக சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார்.

Update: 2019-07-16 10:30 GMT
தமிழக சட்டப் பேரவையில் ராமசாமி படையாச்சி உருவப் படத்தை வரும் 19 ஆம் தேதி முதலமைச்சர் திறந்துவைக்க உள்ளதாக சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார்.  சென்னையில் கடந்த ஆண்டு நடைபெற்ற விழாவில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,  தமிழக சட்டப்பேரவையில் ராமசாமி படையாச்சி முழு உருவ படம் திறந்து வைக்கப்படும் என அறிவித்திருந்தார். அதன்படி, ராமசாமி படையாச்சி உருவப்படத்தை வரும் 19 ஆம் தேதி மாலை, சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்க உள்ளதாக சபாநாயகர்  தனபால் தெரிவித்துள்ளார்.  பேரவையில் 5 மற்றும் 6 வது பாகத்துக்கு இடையே உருவப் படம் அமைய உள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்