சென்னைக்கு வரும் வீராணம் ஏரி நீர் நிறுத்தப்படும் - அணையின் நீர்மட்டம் குறைந்ததால் நடவடிக்கை
வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு வழங்கப்படும் குடிநீர் விரைவில் நிறுத்தப்படும் என பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.;
வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு வழங்கப்படும் குடிநீர், விரைவில் நிறுத்தப்படும் என பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் உள்ள வீராணம் ஏரியில் இருந்து தினமும் 49 கனஅடி நீர் சென்னைக்கு வழங்கப்படுகிறது. ஆனால், ஏரியில், நீர் மட்டம் வேகமாக குறைந்து வருவதாக தெரிவித்த பொதுப் பணித்துறை அதிகாரிகள், தற்போது, 39 கன அடி வீதம் தண்ணீர் வழங்கப்படுவதாக தெரிவித்தனர். சென்னைக்கு வழங்கப்படும் குடிநீர் அளவுப்படி 2 அடிதான் மீதம் உள்ளது என்றும், இதனால் இன்னும் சில தினங்களில் வீராணம் ஏரியில் இருந்து சென்னை குடிநீர் வழங்குவது, முழுவதுமாக நிறுத்தப்படும் என்றும் கூறினர். வீராணம் ஏரி தண்ணீர் நிறுத்தப்படும் என்பதால், மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.