ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 504 உயர்வு

ஆபரண தங்கம் விலை கிராமுக்கு 63 ரூபாய் அதிகரித்துள்ளது.

Update: 2019-07-03 09:13 GMT
ஆபரண தங்கம் விலை கிராமுக்கு 63 ரூபாய் அதிகரித்துள்ளது. சென்னையில் ஒரு சவரன்  504 ரூபாய் உயர்ந்து 26 ஆயிரத்து 232 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாக கடந்த 10 வாரங்களில் ஆபரண தங்கத்தின் விலை 12 சதவீதம் வரை விலை ஏற்றம் கண்டுள்ளது. அமெரிக்க நாணயமான டாலர் விலையில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக, சர்வதேச அளவில் தங்கத்தின் விலை அதிகரித்தாலும், உள்நாட்டு சந்தையில் தேவைகள் அதிகரித்து வருவதும் முக்கிய காரணமாக உள்ளது. குறிப்பாக, இந்தியாவில் அடுத்தடுத்து பண்டிகை காலம் தொடங்க உள்ள நிலையில் தங்கத்தின் தேவை அதிகரிப்பு காரணமாகவும் விலை ஏற்றம் கண்டு வருவதாக கூறப்படுகிறது.
Tags:    

மேலும் செய்திகள்