மனு அளிக்க வந்த பார்வையற்ற தம்பதிகளை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த ஆட்சியர்.... தரையில் படுக்க வைத்த அவலம்

மனு அளிக்க வந்த பார்வையற்ற தம்பதிகளை மதுரை அரசு மருத்துவமனைக்கு, மாவட்ட ஆட்சியர் அனுப்பி வைத்த நிலையில், அவர்களை ஊழியர்கள் தரையில் படுக்க வைத்தனர்.;

Update: 2019-07-03 03:11 GMT
மனு அளிக்க வந்த பார்வையற்ற தம்பதிகளை மதுரை அரசு மருத்துவமனைக்கு, மாவட்ட ஆட்சியர் அனுப்பி வைத்த நிலையில், அவர்களை ஊழியர்கள் தரையில் படுக்க வைத்தனர். மதுரை மாவட்டம் பேரையூரை சேர்ந்த பார்வையற்ற தம்பதிகள் முத்து - ஒச்சம்மாள். சொத்து அபகரிப்பு குறித்து  மனு அளிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இந்த தம்பதியினர் நேற்று வந்தனர். பசியால் வாடிய அவர்களுக்கு உணவு வாங்கி கொடுத்த செய்தியாளர்கள், அந்த தம்பதியை மாவட்ட ஆட்சியரிடம் அழைத்து சென்றனர். இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த ஆட்சியர், பார்வையற்ற தம்பதியை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தார். ஆனால், முதியவர்களுக்கு படுக்க வசதியை அளிக்காத ஊழியர்கள்,அவர்களை தரையில் படுக்க வைத்த அவலம் நிகழ்ந்துள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்