உதவி பேராசிரியர்கள் நியமன முறைகேடு விவகாரம் : மதுரை வக்பு வாரிய கல்லூரியில் சி.பி.ஐ. விசாரணை
மதுரை வக்ஃபு வாரியத்தின் கீழ் செயல்பட்டு வரும் கல்லூரியில், கடந்த 2017-ல், 30 உதவி பேராசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர்.;
மதுரை வக்ஃபு வாரியத்தின் கீழ் செயல்பட்டு வரும் கல்லூரியில், கடந்த 2017-ல், 30 உதவி பேராசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். இவர்களிடம் வாங்கிய லஞ்சப் பணம், கல்லூரி நிர்வாக குழு உறுப்பினர்கள், வக்ஃபோர்டு வாரிய தலைவர் அன்வர் ராஜா, அமைச்சர் நிலோபர் கபில் ஆகியோருக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டதாக, புகார் கூறப்பட்டது. இதுதொடர்பாக சி.பி.ஐ. விசாரணை கோரி சர்தார்பாஷா என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடர்ந்த வழக்கில், ஜனவரி 23-ல் சி.பி.ஐ. விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், இன்று மதுரை கே.கே.நகர் பகுதியில் உள்ள வக்ஃபு வாரிய கல்லூரியில், சி.பி.ஐ. விசாரணை நடைபெற்றது.