சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் ஆட்கொணர்வு வழக்கு : விசாரணை 8 வாரங்களுக்கு ஒத்திவைப்பு
சுற்றுச்சுழல் ஆர்வலர் முகிலனை கண்டுபிடிக்க, சி.பி.சி.ஐ.டி. மற்றும் காவல் துறையினர் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக, சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்தது.;
சுற்றுச்சுழல் ஆர்வலர் முகிலனை கண்டுபிடிக்க, சி.பி.சி.ஐ.டி. மற்றும் காவல் துறையினர் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக, சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்தது. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக ஆவண படத்தை வெளியிட்ட சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன், கடந்த பிப்ரவரி மாதம் காணாமல் போனார். இவரை கண்டுபிடித்து தரக்கோரி தொடரப்பட்ட ஆட்கொணர்வு மனுவில், சி.பி.சி.ஐ.டி. தரப்பில், மூடி முத்திரையிடப்பட்ட உறையில் 3வது அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து நடைபெற்ற விசாரணையின் போது, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் நிர்மல் குமார் அடங்கிய அமர்வு, மேற்கண்ட கருத்தை தெரிவித்து, வழக்கை 8 வாரங்களுக்கு ஒத்தி வைத்தது.