சிமி இயக்கம் குறித்து 3 நாள் விசாரணை : தடை நீட்டிப்பது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை
சிமி இயக்கம் மீதான தடை நீடிப்பு குறித்து குன்னூரில் 3 நாட்கள் நடைபெற்ற விசாரணை நிறைவு பெற்றது.;
சிமி இயக்கம் மீதான தடை நீடிப்பு குறித்து குன்னூரில் 3 நாட்கள் நடைபெற்ற விசாரணை நிறைவு பெற்றது, குன்னூர் நகராட்சி கூட்ட அரங்கில் கடந்த சனிக்கிழமை தொடங்கிய கூட்டத்தில் அரசு வழக்கறிஞர்கள், உள்துறை அதிகாரிகள், தமிழக புலனாய்வு அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் பல்வேறு தீவிரவாத சம்பவங்களில் இந்த அமைப்பு ஈடுபட்டதாக கூறி ஆதாரங்கள் அளிக்கப்பட்டதாக தெரிகிறது. இதனை தொடர்ந்து 3 நாள் விசாரணை நிறைவு பெற்றது.இதற்கான அறிக்கை மத்திய அரசிடம் ஆகஸ்ட் மாத இறுதியில் வழங்கப்பட உள்ளது.