தமிழகத்தில் நிபா வைரஸ் பாதிப்பு இல்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்
தமிழகத்தில் நிபா வைரஸ் பாதிப்பு இல்லை எனவும், அதனை தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.;
தமிழகத்தில் நிபா வைரஸ் பாதிப்பு இல்லை எனவும், அதனை தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரியில் கதிரியல் துறையில் கூடுதலாக வாங்கப்பட்டுள்ள சுமார் 4 கோடி மதிப்பிலான அதிநவீன உபகரணங்களை அவர் திறந்து வைத்தார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், நிபா வைரஸ் மற்றும் மூளைக்காய்ச்சலை தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.