மழை நீரை குடிநீராக பயன்படுத்தும் பொறியாளர்...

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் சுமார் 14 ஆண்டுகளாக மழை நீரை சேமித்து பொறியாளர் ஒருவர் குடிநீராக பயன்படுத்தி வருகிறார்.

Update: 2019-06-18 21:59 GMT
கடந்த 2005 ஆம் ஆண்டு, சுமார் 75 ஆயிரம் செலவில் வீட்டினுள் குழாய்கள் அமைத்து, வீட்டின் அடியில் 15 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மூன்று தொட்டிகளை கட்டியுள்ளார். இதன் மூலம் மழை நீரை சேமித்து, அவற்றை குடிப்பதற்கும் சமைப்பதற்கும் பயன்படுத்தி வருகிறார். இதனால் நோய் தொற்றும் எதுவும் ஏற்படவில்லை, உடல் ஆரோக்கியமாக இருப்பதாக அவர் கூறுகிறார். இந்த  முறையை பொது மக்கள் கையாண்டால் குடிநீருக்காக வெளியில் செல்ல தேவை இருக்காது என்று தெரிவிக்கும் அவர்,  மழை நீரை சேமிக்கும் திட்டத்திற்கு அரசு மாணியம் வழங்கி ஊக்குவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்