2 நாட்களுக்கு ஒரு முறை 5 குடம் தண்ணீர் மட்டுமே, நெல்லை மாநகராட்சி மக்களின் அவலநிலை

நெல்லை மாநகராட்சியின் மத்திய பகுதியான மகராஜநகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் கடும் தண்ணீர் பஞ்சம் நிலவுகிறது.

Update: 2019-06-18 01:32 GMT
நெல்லை மாநகராட்சியின் மத்திய பகுதியான மகராஜநகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் கடும் தண்ணீர் பஞ்சம் நிலவுகிறது. இரண்டு நாட்களுக்கு ஒருமுறை 5 குடம் தண்ணீர் மட்டுமே கிடைப்பதாகவும், கழிப்பறைக்கு கூட தண்ணீர் இல்லை என்றும், பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர். மேலும், உப்பு தண்ணீரை 100 ரூபாய் முதல் 300 ரூபாய் வரை விலைக்கு வாங்கி பயன்படுத்துகின்றனர். குடியிருப்பு வளாகத்தில் அமைக்கப்பட்ட ஆழ்குழாய் கிணறுகளும் அடிபம்புகளும் தண்ணீரின்றி பயனற்றுக் கிடக்கிறது. தற்போது நிலவும் தண்ணீர் பிரச்சனைக்கு, மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக தீர்வு காணவேண்டும் என குடியிருப்புவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்