காவிரி ஆற்றில், விதிகளை மீறி மணல் அள்ளப்படுவதாக புகார்...
திருவெறும்பூர் அருகே கிளியூர், பத்தாளப்பேட்டை பகுதியில் விதிகளை மீறி மணல் அள்ளுவதற்காக, லாரி உரிமையாளர் ஒருவரிடம் தாசில்தார் அண்ணாதுரை என்பவர் 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்கும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.;
திருவெறும்பூர் அருகே கிளியூர், பத்தாளப்பேட்டை பகுதியில் விதிகளை மீறி மணல் அள்ளுவதற்காக, லாரி உரிமையாளர் ஒருவரிடம் தாசில்தார் அண்ணாதுரை என்பவர் 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்கும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனிடையே மணல் கடத்தலுக்கு லஞ்சம் கேட்ட புகார் தொடர்பாக திருவெறும்பூர் தாசில்தார் அண்ணாதுரையை காத்திருப்போர் பட்டியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக திருவெறும்பூர் புதிய தாசில்தாராக ரபீக் அகமது நியமனம் செய்யப்ப்படுள்ளார்.