தங்கத்தால் உருவாக்கப்பட்ட உலகக் கோப்பை : புதுக்கோட்டை நகை கடை உரிமையாளர் அசத்தல்

புதுக்கோட்டையில் நகைக் கடை உரிமையாளர் ஒருவர் ஒரு இன்ச் உயரத்தில் தங்க உலகக் கோப்பையை உருவாக்கியுள்ளார்.

Update: 2019-06-16 17:35 GMT
புதுக்கோட்டையில் நகைக் கடை உரிமையாளர் ஒருவர் ஒரு இன்ச் உயரத்தில் தங்க உலகக் கோப்பையை உருவாக்கியுள்ளார். இந்தியாவில் கிரிக்கெட் ஜூரம் தொற்றி கொண்ட நிலையில்,  புதுக்கோட்டையைச் சேர்ந்த நகை கடை உரிமையாளர் வீரமணி தனது நகைக்கடை பட்டறையில் 500 மில்லி எடையில் தங்க உலகக் கோப்பையை உருவாக்கியுள்ளார். இதேபோன்று 300 கிராம் எடையுள்ள வெள்ளியிலான உலக கோப்பையும் உருவாக்கியுள்ளார். இந்த உலகக் கோப்பையை ஏராளமான பார்வையாளர்கள் கண்டு சென்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்