"நிதி ஆயோக்" கூட்டத்தில் பங்கேற்பதற்காக டெல்லி சென்றார் முதல்வர் பழனிச்சாமி

டெல்லியில் இன்று பிரதமர் தலைமையில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்றுள்ளார்.;

Update: 2019-06-15 02:19 GMT
டெல்லியில் இன்று பிரதமர் தலைமையில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்றுள்ளார். அங்கு பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தனியாக சந்தித்து பேச நேரம் கேட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. நேரம் கிடைக்கும் பட்சத்தில், தமிழக அரசியல் நிலவரம், வளர்ச்சி திட்டங்களுக்கு நிதி வழங்குவது, புயல் நிவாரண நிதியை கூடுதலாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முதலமைச்சர் முன்வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

மேலும் செய்திகள்