தாம்பரம் அருகே ராமராஜ் காட்டன் நிறுவனத்தின் 146 வது விற்பனையகம் திறப்பு
வேட்டி சட்டைகளுக்கு மிக நம்பிக்கையான பிராண்டு விருது தொடர்ந்து 4 வது ஆண்டாக ராமராஜ் காட்டன் நிறுவனத்திற்கு கிடைத்துள்ளதாக கே.ஆர் நாகராஜன் கூறினார்.;
இந்தியாவில், வேட்டி சட்டைகளுக்கு மிக நம்பிக்கையான பிராண்டு விருது தொடர்ந்து 4 வது ஆண்டாக ராமராஜ் காட்டன் நிறுவனத்திற்கு கிடைத்துள்ளதாக அந்த நிறுவனத்தின் நிறுவனர் கே.ஆர் நாகராஜன் கூறினார். சென்னை, தாம்பரம் அருகே, ராஜகீழ்பாக்கத்தில் ராமராஜ் காட்டன் நிறுவனத்தின் 146 வது விற்பனையக திறப்பு விழா நடைபெற்றது. அப்போது பேசிய அவர், இந்தியாவில் வேட்டி சட்டைகளுக்கான பிராண்டில் மிக நம்பிக்கையான பிராண்டு விருது தொடர்ந்து 4 வது ஆண்டாக ராமராஜ் காட்டன் நிறுவனத்திற்கு கிடைத்துள்ளது என்று குறிப்பிட்டார். சர்வதேச நிறுவனங்களின் போட்டி உள்ள நிலையில் தொடர்ந்து ராம்ராஜ் நிறுவனம் விருது பெறுவதன் மூலம் நெசவாளர்களுக்கு ஊக்கம் கிடைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.