நீட் 'கட் ஆப்' மதிப்பெண் அதிகரிப்பு - மாணவர்கள் அதிர்ச்சி

நீட் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், மருத்துவ படிப்புக்கான கட் ஆப் மதிப்பெண் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.

Update: 2019-06-05 13:19 GMT
நீட் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், மாணவர்கள் பலர் அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளதால், மருத்துவ படிப்புக்கான கட் ஆப் மதிப்பெண் அளவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்னேறிய பிரிவினருக்கு கடந்த ஆண்டு  119 ஆக இருந்த கட் ஆப் மதிப்பெண், இந்த ஆண்டு134 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேபோல  ஓ.பி.சி பிரிவினருக்கு 96 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்த கட் ஆப் மதிப்பெண், இந்த ஆண்டு 107 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு எளிதாக இருந்த‌தால், நிம்மதி அடைந்திருந்த மாணவர்கள், கட் ஆப் மதிப்பெண் திடீரென உயர்த்தப்பட்டுள்ளதால் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்