நெல்லையப்பர் திருக்கோவில் ஆனிபெருந்திருவிழா தொடக்கம்
நெல்லையில் பிரசித்திபெற்ற நெல்லையப்பர் கோவிலில் ஆனி பெருந் திருவிழா நடைபெறுகிறது.;
நெல்லையில் பிரசித்திபெற்ற நெல்லையப்பர் கோவிலில் ஆனி பெருந் திருவிழா நடைபெறுகிறது. இதன் தொடக்கமாக, ஊர்க்காவல் தெய்வமான பிட்டாபுரத்தி அம்மன் கோவிலில் கொடியேற்றம் நடைபெற்றது. நெல்லையப்பர் கோவில் ஆனிப்பெருந்திருவிழா 41 நாட்கள் நடைபெறும். இதன் முதல் நிகழ்வான இந்த கொடியேற்றத்தை முன்னிட்டு பிட்டாபுரத்தி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து, கோவில் யானை சுமந்து வந்த திருக்கொடி, கொடிமரத்தில் ஏற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வரும் 10-ஆம் தேதி நெல்லையப்பர் கோவிலில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.