அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பொறியியல் கல்லூரிகள் அங்கீகாரத்தை ரத்து செய்ய பரிந்துரை செய்வோம் - அருளரசு

கூடுதல் கட்டணங்களை வசூலித்தால் அங்கீகாரத்தை ரத்து செய்ய பரிந்துரை செய்வோம் எனவும், விசாரணை குழு தலைவர் அருளரசு எச்சரித்துள்ளார்

Update: 2019-05-17 20:27 GMT
தனியார் பொறியியல் கல்லூரிகள், அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் எனவும், கூடுதல் கட்டணங்களை வசூலித்தால் அங்கீகாரத்தை ரத்து செய்ய பரிந்துரை செய்வோம் எனவும், விசாரணை குழு தலைவர் அருளரசு எச்சரித்துள்ளார். பொறியியல் கல்லூரிகள் அதிக கட்டணம் வசூலித்தால், அது குறித்து விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுப்பதற்காக, தொழில்நுட்ப கல்வி கூடுதல் இயக்குனர் அருளரசு தலைமையில் 4 பேர் கொண்ட குழுவை, தமிழக அரசு அமைத்துள்ளது.சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது என, அனைத்து கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளதாக தெரிவித்தார்.மேலும், அதிக கட்டணம் வசூலிக்கும் கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய பரிந்துரை செய்வோம் என்றும் கூறினார்.
Tags:    

மேலும் செய்திகள்