பேராயர் எஸ்ரா சற்குணம் மீது பா.ம.க. வழக்கு : இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்தவர்களை கொச்சைபடுத்தியதாக புகார்

இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்தவர்களை கொச்சைபடுத்தும் வகையில் பேசியதாக, பேராயர் எஸ்ரா சற்குணத்துக்கு எதிராக பா.ம.க. சார்பில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது

Update: 2019-05-06 18:44 GMT
இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்தவர்களை கொச்சைபடுத்தும் வகையில் பேசியதாக, பேராயர் எஸ்ரா சற்குணத்துக்கு எதிராக பா.ம.க. சார்பில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. மேலும், ஒரு கோடி ரூபாய் மானநஷ்ட ஈடு கேட்டு எழும்பூர் நீதிமன்றத்தில் பா.ம.க. அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளது. பொன்பரப்பி கலவரத்தை கண்டித்து, சென்னை  வள்ளுவர் கோட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் கடந்த மாதம் நடந்த  போராட்டத்தில்,1987-ல் நடந்த இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் ஆகியோரை கொச்சைபடுத்தி பேசியதாக, பா.ம.க. தேர்தல் பணிக்குழு செயலாளர் ஞானசேகரன் எழும்பூர் 5வது குற்றவியல் நீதிமன்றத்தில்  வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு வரும் 20ம் தேதி விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

மேலும் செய்திகள்