மருத்துவமனையில் குழந்தையை கடத்தி சென்ற பெண் சிக்கினார்

பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட ஆண் குழந்தை 10 மணி நேரத்தில் மீட்கப்பட்டுள்ளது.;

Update: 2019-05-06 01:50 GMT
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள நரிக்கல்பதியை சேர்ந்த பாலன் - தேவி தம்பதிக்கு  பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. பிறந்து ஆறு நாட்களே ஆன குழந்தையை நேற்று பெண் ஒருவர் கடத்தி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து குழந்தையை கடத்திய பெண்னை தனிப்படை அமைத்து தேடி வந்த‌னர். இந்த நிலையில் குறிச்சிக்கோட்டையை சேர்ந்த ரங்கசாமியின் மனைவி மாரியம்மாள் போலீசார் வசம் சிக்கினார். திருமணமாகி 5 ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்துவந்த மாரியம்மாள், 5 மாதம் கர்ப்பம் தரித்துள்ளார். இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் குறை பிரசவத்தில், குழந்தை இறந்துவிட்டதால், உறவினர்களுக்கும், கணவருக்கும் பயந்து, மருத்துவமனையில் இருந்து குழந்தையை திருடி சென்றதாக மாரியம்மாள் வாக்குமூலம் அளித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்