ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டால் வேலை பறிபோகும் : 1500 ஆசிரியர்களின் நிலை கேள்விகுறி

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் வழங்க கோரிய தமிழக அரசின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்தது.

Update: 2019-05-01 06:08 GMT
ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் வழங்க கோரிய தமிழக அரசின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்தது. இது தொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குனர் வெளியிட்ட அறிவிப்பில், ஆசிரியர் தகுதி தேர்வை முடிக்காமல் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்காக கேட்கப்பட்டிருந்த கால அவகாசத்தை மத்திய அரசு நிராகரித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடைசி அவகாசமாக  நடைபெற உள்ள ஆசிரியர் தகுதித் தேர்வில் கட்டாயமாக தேர்ச்சி பெற்றாக வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இதனால் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆயிரத்து 500 ஆசிரியர்களிடையே வேலை பறிபோகுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்