ஆற்றில் குளித்த தொழிலாளியை இழுத்துச் சென்ற முதலை
சிதம்பரம் அருகே உள்ள பெராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஜெயமணி என்பவர் தனது மனைவியுடன் கொள்ளிடம் ஆற்றில் மேலகுண்டலபாடி கிராமத்தில் குளித்துள்ளார்.;
ஆற்றுக்குள் இருந்த முதலை ஒன்று, கண்ணிமைக்கும் நேரத்தில் ஜெயமணியை கடித்து, இழுத்துச் சென்றது. இதையடுத்து, அவரது மனைவி மற்றும் அக்கம் பக்கம் உள்ளவர்கள் கத்தியபடியே முதலையை விரட்டியுள்ளனர். எனினும் ஜெயமணியை முதலை இழுத்துச் சென்று விட்டது. இதையடுத்து, படகில் சென்று 3 மணி நேரத்துக்கு மேலாக தேடியும் அவரை மீட்க முடியவில்லை. சிதம்பரம் வருவாய் துறையினர் அண்ணாமலைநகர் போலீசார் மற்றும் வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர். இரவு நேரமாகி விட்டதால், தேடும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. காலையில் மீண்டும் ஜெயமணியை தேடி முடிவு செய்யப்பட்டது.