திப்பு சுல்தான் காலத்தில் கட்டப்பட்ட பழங்கால கோட்டை - மர்மநபர்கள் வெடி வைத்து தகர்ப்பதாக பொதுமக்கள் புகார்

வேலூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே புதையல் இருப்பதாக கூறி மர்மநபர்கள் பழங்கால கோட்டையை வெடிவைத்து தகர்த்து வருவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

Update: 2019-04-23 21:06 GMT
நாட்றம்பள்ளியை  அடுத்த செட்டேரி டேம் பகுதியில் திப்பு சுல்தான் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட பழங்கால கோட்டை உள்ளது. ஆயிரத்தி ஐநூறு அடி உயரம் கொண்ட மலையின் மீது அமைந்துள்ள இந்த கோட்டைக்குள் தங்கம் , வெள்ளி புதையல் இருக்க கூடும் என்று அந்த வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. என கூறி 20 க்கும் மேற்பட்ட மர்ம நபர்கள் இரவு பகலாக கோட்டை மதில் சுவர்களையும் பாறைகளையும் வெடி வைத்து தகர்த்து வருவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். பாரம்பரிய கோட்டையை பாதுகாக்க தொல்லியல்துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்