குட்கா வழக்கில் கைதான 3 பேருக்கு நிபந்தனை ஜாமீன்
புற்றுநோய் மருத்துவமனைக்கு ரூ.6 லட்சம் வழங்க கோரி உத்தரவு;
குட்கா வழக்கில் கைதான மூன்று பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை தமிழகம் முழுவதும் விற்பனை செய்ததாக, குட்கா தொழிற்சாலை உரிமையாளர் மாதவராவ், பங்குதாரர்கள் சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். இன்று அவர்கள் தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்த நீதிபதி திருநீலப்பிரசாத், மூவருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கியதோடு, அடையாறில் உள்ள புற்றுநோய் மருத்துவமனைக்கு மூவரும் தலா 2 லட்ச ரூபாய் வீதம் ஆறு லட்ச ரூபாயை வழங்க கோரி உத்தரவிட்டார்.