களைகட்டியுள்ள கூத்தாண்டவர் கோவில் திருவிழா

மத்திய, மாநில அரசுகள் நிறைய சலுகைகளை வழங்க வேண்டும் என்று திருநங்கைகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2019-04-14 11:47 GMT
* மூன்றாம் பாலினமாக கருதப்படும் திருநங்கைகளின் குலதெய்வமான கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா கடந்த 2 ஆம் தேதி சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

* விழாவின் முக்கிய நிகழ்வாக வருகிற 16 ஆம் தேதி சாமி கண் திறத்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அன்றைய தினம் திருநங்கைகள் தங்களை மணப்பெண்கள்போல் அலங்கரித்துக்கொண்டு கோவில் பூசாரியின் கையால் தாலி கட்டிக்கொள்வார்கள். பின்னர், மறுநாள் 17 ஆம் தேதி சித்திரை தேரோட்டம் நடக்கிறது.

* இந்த திருவிழாவில் கலந்துகொள்ள  நாடு முழுவதிலும் இருந்தும் ஏராளமான திருநங்கைகள் விழுப்புரத்தில் குவிய துவங்கியுள்ளனர்.

* விழுப்புரம் வந்துள்ள திருநங்கைகள், உற்சாகமாக போட்டோவிற்கு போஸ் கொடுத்த படியும், சக திருநங்கைகள் உடன் செல்பி எடுத்தும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

* தீபாவளி, பொங்கல் பண்டிகையை விட கூவாகம் திருவிழாவையே மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாடுவதாக கூறும் திருநங்கைகள், கூவாகம் கிராமத்தில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்