மயிலாப்பூரில் அரியவகை கிளிமூக்கு விசிறிவால் சேவல் கண்காட்சி
கண்காட்சிக்கு நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து வந்த சேவல் ஆர்வலர்கள்;
நான்கு வருடங்களாக திண்டுக்கல் மாவட்டத்தில் நடந்து இந்த சேவல் கண்காட்சி, முதல் முறையாக இந்தாண்டு சென்னை மயிலாப்பூரில் நடைபெற்றுள்ளது. இந்த கண்காட்சியில், நூற்றுக்கும் மேற்பட்ட கிளிமூக்கு மற்றும் விசிறிவால் சேவல்கள் இந்த கண்காட்சியில் இடம்பெற்றிருந்தது. கண்காட்சியில் சேவல்கள் விற்பனையும் நடைபெற்றது. திருச்சி, திண்டுக்கல், கரூர், உள்ளிட்ட பல மாவட்டங்கள் வெளிமாநிலங்களில் இருந்து சேவல்களுடன் இந்த கண்காட்சியில் மக்கள் கலந்து கொண்டனர்.இந்த வகை சேவல்கள் 10 ரூபாயில் இருந்து 2 லட்சம் வரையிலும் விற்பனையாயின. சிலர் 6 லட்சம் ரூபாய் வரை தங்கள் சேவலுக்கு விலை நிர்ணயம் செய்திருந்தனர்