முன்னாள் அதிமுக எம்எல்ஏ சுந்தரவேல் விபத்தில் உயிரிழப்பு

ஆம்பூர் அருகே நிகழ்ந்த கார் விபத்தில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சுந்தரவேல், அவரது மனைவி உள்ளிட்ட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

Update: 2019-04-06 04:08 GMT
ஆம்பூர் அருகே நிகழ்ந்த கார் விபத்தில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சுந்தரவேல், அவரது மனைவி உள்ளிட்ட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.வும் , தற்போது திருப்பத்தூர் நகர அமமுக செயலாளராகவும் உள்ள  சுந்தரவேல் கார் மூலம் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தார். வேலூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த விண்ணமங்கலம் அருகே சென்ற போது முன்னால் பாய்லர் ஏற்றி சென்ற டிரெய்லர் லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானது.  லாரியின் அடியில் சிக்கி கொண்ட கார் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் சுந்தரவேல், அவரது மனைவி விஜயலட்சுமி, கார் ஓட்டுனர் சுந்தரவேல் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தீயணைப்புத்துறையினர் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தீவிர முயற்சி மேற்கொண்டு , டிரெய்லர்  லாரியின் அடியில் சிக்கி கொண்ட காரை உடைத்து உடல்களை மீட்டனர்.  

Tags:    

மேலும் செய்திகள்