ஜம்புகேஸ்வரர் கோயில் பங்குனி தேரோட்டம்

பங்குனி உற்சவத்தையொட்டி, திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயில் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.;

Update: 2019-04-05 08:36 GMT
பஞ்சபூதங்களில் நீர்தலமாக விளங்கும் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயிலில் பங்குனி உற்சவம் கொண்டாடப்படுகிறது. முக்கிய நிகழ்வான தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரில் உற்சவர் ஜம்புகேசுவரரும், மற்றொரு தேரில் அகிலாண்டேஸ்வரி தாயாரும் எழுந்தருளினர். அப்போது,  தென்னாட்டுடைய சிவனே போற்றி என்னாட்டவருக்கும் இறைவா போற்றி என்று கோஷம் எழுப்பிய பக்தர்கள், வடம் பிடித்து தேரை இழுத்து சென்றனர். 4 உள்வீதிகளில் அடி அசைத்து வந்த பெரியதேர், நிலையை வந்தடைந்தது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இந்த தேரோட்டத்தில் பங்கேற்றனர்.  
Tags:    

மேலும் செய்திகள்