காஞ்சிபுரம் சோமாஸ்கந்தர் கோயில் சிலை விவகாரத்தில் மோசடி : முன்னாள் இந்து அறநிலையத்துறை ஆணையர் கைது

காஞ்சிபுரம் சோமாஸ்கந்தர் கோயில் சிலை விவகாரத்தில் மோசடி செய்ததாக முன்னாள் இந்து அறநிலையத் துறை ஆணையர் வீரசண்முகமணியை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.

Update: 2019-03-15 10:57 GMT
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் உள்ள சோமாஸ்கந்தர் சிலை செய்ததில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக, இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதா ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில் இதுதொடார்பாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். ஆகம விதிகளின்படி 86 கிலோ எடையில் செய்யப்பட்டிருக்க வேண்டிய சோமாஸ்கந்தர் சிலையை, சிறிது தங்கம் கூட பயன்படுத்தாமல், 111 கிலோ எடையில் செய்து, அதனை பிரதிஷ்டை செய்திருப்பதும் விசாரணையில் கண்டறியப்பட்டது. இதையடுத்து ஸ்தபதி முத்தையா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர் முன்ஜாமீன் பெற்றார். இந்த நிலையில் இந்த விவகாரத்தில் முன்னாள் இந்து அறநிலையத் துறை ஆணையர் வீரசண்முகமணியை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்