எம்ஜிஆர் நூற்றாண்டு நினைவு வளைவுக்கு தடை கோரிய மனு தள்ளுபடி

சென்னை மெரினா கடற்கரையில் எம்ஜிஆர் நூற்றாண்டு நினைவு வளைவு அமைக்க தடை கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

Update: 2019-02-21 08:19 GMT
சென்னை மெரினா கடற்கரையில் எம்ஜிஆர் நூற்றாண்டு நினைவு வளைவு அமைக்க தடை கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மெரினா கடற்கரை சாலையில் 2 கோடியே 52 லட்சம் ரூபாய் செலவில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நினைவு வளைவு அமைக்க தடை கோரி வழக்கறிஞர் தினேஷ்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு, நினைவு வளைவு கட்டப்பட்டுள்ள காமராஜர் சாலை, மாநகராட்சி கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், அங்கு கட்டுமானங்கள் மேற்கொள்ள அரசுக்கு அதிகாரம் உள்ளதாகவும் அரசு தரப்பில் முன் வைக்கப்பட்டது. இந்த வாதத்தை ஏற்று வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
Tags:    

மேலும் செய்திகள்