தமிழக அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் தட்டுப்பாடு

தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் தட்டுப்பாட்டால் நோயாளிகள், கடுமையான பாதிப்பை சந்தித்து வருவதாக, சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.

Update: 2019-02-12 12:48 GMT
தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் மருந்துகள்  தட்டுப்பாட்டால் நோயாளிகள், கடுமையான பாதிப்பை சந்தித்து வருவதாக, சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் ரவீந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், செயற்கையான மருந்து தட்டுப்பாட்டை ஏற்படுத்தி, தனியார் மருந்து நிறுவனங்கள் அரசிடம் கூடுதல் பணம் பெற திட்டமிட்டு வருவதாக குற்றம் சாட்டி உள்ளார். தனியார் மருந்து நிறுவனங்களின் நடவடிக்கையால், நோயாளிகள் அதிக விலை கொடுத்து மருந்துகளை வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டு வருவதாகவும், மத்திய மாநில அரசுகள் இப்பிரச்சனையில் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்