பேருந்தை நோக்கி வந்த யானைக் கூட்டம் : அச்சத்தில் உறைந்த பயணிகள்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே வனச்சாலையில் அரசு பேருந்தை, யானைகள் கூட்டம் வழிமறித்து துரத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update: 2019-02-11 11:45 GMT
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே வனச்சாலையில் அரசு பேருந்தை, யானைகள் கூட்டம் வழிமறித்து துரத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. பவானிசாகரில் இருந்து தெங்குமரஹாடா  சென்ற அரசு பேருந்தை  யானைகள் கூட்டம் திடீரென வழிமறித்தன. இதையடுத்து, பேருந்தை நிறுத்திய ஓட்டுனர், பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்தார். தொடர்ந்து, பேருந்தை நோக்கி வந்த யானைகள், நீண்ட நேரம் அங்கேயே நின்றன. யானைக்கூட்டம்  வனப்பகுதிக்குள் சென்ற பிறகே பேருந்து அங்கிருந்து புறப்பட்டது. இதனால் பயணிகள் நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.
Tags:    

மேலும் செய்திகள்