'வாட்ஸ் அப்' பார்த்துக்கொண்டே பேருந்தை இயக்கிய ஓட்டுநர் பணியிடை நீக்கம்...

'வாட்ஸ் அப்' பார்த்துக்கொண்டே பேருந்தை இயக்கிய பேருந்து ஓட்டுநர் அரங்கநாதனை பணியிடை நீக்கம் செய்து மயிலாடுதுறை அரசு போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது.;

Update: 2019-02-07 21:36 GMT
மயிலாடுதுறை கிளை அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராக பணியாற்றி வரும் அரங்கநாதன் என்பவர் நேற்று முன் தினம் மயிலாடுதுறை புதிய பேருந்து நிலையத்திலிருந்து பேரளம் வழியாக  நாகைக்கு செல்லும் போது, 'வாட்ஸ் அப்' பார்த்துக்கொண்டே பேருந்தை இயக்கியுள்ளார். இந்த காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகியது. இதனை தொடர்ந்து பேருந்து ஓட்டுநர் அரங்கநாதனை பணியிடை நீக்கம் செய்து மயிலாடுதுறை அரசு போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்