இயந்திரங்கள் மூலம் பயணசீட்டு பெறும் முறை - ரயில் பயணிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை
இயந்திரங்கள் மூலமாக பயணசீட்டு பெறும் வழக்கம் குறித்து பயணிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தென்னக ரயில்வே பொதுமேலாளர் குல்ஷ்ரேஸ்தா தெரிவித்துள்ளார்.;
இயந்திரங்கள் மூலமாக பயணசீட்டு பெறும் வழக்கம் குறித்து பயணிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தென்னக ரயில்வே பொதுமேலாளர் குல்ஷ்ரேஸ்தா தெரிவித்துள்ளார். திருப்பூர் ரயில் நிலையத்தில் ஆய்வு செய்த அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது திருப்பூர் ரயில் நிலையத்தில் தொழிலாளர்கள் அதிகளவில் கூடுவதால் கூடுதல் டிக்கெட் கவுண்டர்களை திறக்க வேண்டும் என மனு அளிக்கப்பட்டது. அதிகாரிகளுடன் ஆலோசிக்க தேவை ஏற்பட்டால் கூடுதல் டிக்கெட் கவுண்டர் திறக்கப்படும் என்று கூறினார்.