அண்ணா சிலைக்கு அதிமுகவினர் மரியாதை : இரண்டு பிரிவாக சென்றதால் கடலூரில் பரபரப்பு

அண்ணா நினைவு தினத்தையொட்டி, கடலூரில் அவரது சிலைக்கு, அதிமுகவினர் இரண்டு பிரிவாக சென்று மாலை அணிவித்தது, பரபரப்பை ஏற்படுத்தியது.

Update: 2019-02-03 06:54 GMT
அண்ணா நினைவு தினத்தையொட்டி, கடலூரில் அவரது சிலைக்கு, அதிமுகவினர் இரண்டு பிரிவாக சென்று மாலை அணிவித்தது, பரபரப்பை ஏற்படுத்தியது. கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள அண்ணா சிலைக்கு அமைச்சர் எம்.சி.சம்பத் தலைமையில் ஒரு பிரிவினர் மாலை அணிவித்தனர். அதனை தொடர்ந்து அதிமுக அவைத்தலைவர் ஐயப்பன் தலைமையில் அதிமுகவினர் தலைமை தபால் நிலையம் அருகில் இருந்து ஊர்வலமாக சென்று அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனர். ஒரே பகுதியில், அதிமுகவினர் இரண்டு பிரிவாக சென்று அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தது, கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Tags:    

மேலும் செய்திகள்