நடிகர் அஜித்துக்கு நன்றி தெரிவித்தது அண்ணா பல்கலை. - கவுரவ பதவியில் ஆலோசகராக பணியாற்ற அழைப்பு

ஆள் இல்லா விமானத்தை வெற்றிகரமாக தயாரிக்க உதவி செய்ததற்காக, நடிகர் அஜித்திற்கு அண்ணா பல்கலைக்கழகம் நன்றி தெரிவித்துள்ளது.;

Update: 2019-01-31 22:25 GMT
அவசரம் மற்றும் பேரிடர் காலத்தின்போது, மக்களுக்கு உதவும் வகையில், ஒருவர் பயணம் செய்யும் படியான, நவீன விமானத்தை அண்ணா பல்கலைக்கழக குழு தயாரித்தது. இந்த விமானத்தின் வடிவமைப்பு மற்றும் தயாரிப்பில் நடிகர் அஜித் ஆலோசனைகளை வழங்கி ஆலோசகராக 10 மாதம் பணி புரிந்தார். இந்நிலையில் இந்த திட்டம் முடிவுக்கு வந்துள்ளதாக குறிப்பிட்டும், அஜித்தின் பங்களிப்பை பாராட்டியும் அண்ணா பல்கலைக்கழகம் அவருக்கு கடிதம் அனுப்பியுள்ளது. வருங்காலத்தில் விருப்பம் இருந்தால் தேவைக்கேற்ப, கவுரவ பதவியில் அஜித் ஆலோசகராக பணியாற்ற வேண்டும் என்றும் அவரை அண்ணா பல்கலை கழகம் கேட்டுக் கொண்டுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்