கூந்தன்குளம் பறவைகள் காப்பகம் : வெளிநாட்டு பறவைகள் வருகை அதிகரிப்பு

நெல்லை மாவட்டம் கூந்தன்குளத்திற்கு வெளிநாட்டு பறவைகள் அதிகளவு வர தொடங்கியுள்ளது. இதனால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Update: 2019-01-23 14:17 GMT
நெல்லை மாவட்டம் நாங்குனேரி தாலுகாவில் கூந்தன்குளம் கிராமம் உள்ளது. கடந்த 1994ஆம் ஆண்டு கூந்தன்குளம் பறவைகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டது. இங்கு டிசம்பர், ஜனவரி மாதங்களில் வரும் வெளிநாட்டு பறவைகள் குஞ்சுகள் பொரித்து பெரிதாகி மீண்டும் மே, ஜூன் மாதங்களில் தங்கள் நாடுகளுக்கு திரும்பி சென்றுவிடுகின்றன. இந்நிலையில், தற்போது கூந்தன்குளத்திற்கு சைபீரிய நாட்டில் இருந்து பூநாரைகள், பட்டைத்தலை வாத்து, ஊசிவால் வாத்து  உள்ளிட்ட 43 பறவைகள் வரத் தொடங்கியுள்ளன். இதனால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பறவைகள் அதிகம் வந்தால் மழையும் அதிகளவு பெய்யும் என்பது கிராம மக்களின் நம்பிக்கை.
Tags:    

மேலும் செய்திகள்