கஜா புயல் நிவாரண தொகை குறித்த விவரங்கள் : தமிழக அரசு தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழக அரசு தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு;

Update: 2019-01-22 20:26 GMT
கஜாப்புயல்  நிவாரண தொகை குறித்த விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள்,  கஜாப்புயல் நிவாரணமாக இதுவரை எவ்வளவு தொகை பெறப்பட்டுள்ளது? அதில் எவ்வளவு தொகை பாதிக்கப்பட்டோருக்கு வழங்கப்பட்டுள்ளது?  எந்த அடிப்படையில் நிவாரணத் தொகை வழங்கப்பட உள்ளது? என்பது குறித்த விபரங்களைத் தாக்கல் செய்ய மாநில பேரிடர் மேலாண்மை வாரியத்துக்கு உத்தரவிட்டனர். பின்னர், வழக்கு விசாரணையை வரும் 28ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்