ஆஸ்துமா நோயாளிகளுக்கு நவீன சாதனம் - தமிழக மாணவர்கள் சாதனை

ஆந்திராவில் நடந்த தேசிய அளவிலான போட்டியில், ஆஸ்துமா நோயாளிகளுக்கு புதிய தொழில்நுட்பத்தை வடிவமைத்து சத்தியமங்கலம் தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்

Update: 2019-01-12 03:45 GMT
கலிபோர்னியா பெர்க்லி பல்கலைக்கழகம், ஆந்திர மாநில அரசுடன் இணைந்து கே.எல் பல்கலைக்கழகம் தேசிய அளவில்  போட்டியை நடத்தியது. நாடு முழுவதிலிருந்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இதில்  கலந்து கொண்டனர்.  
தமிழகம் சார்பில் சத்தியமங்கலம் தனியார் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் பரத்வாஜ், தாரணி சுப்புராஜ், பரணி அஸ்வத், ஹிரிபிரசாத், கமலேஷ் ஆகியோர்  பங்கேற்றனர். ஆஸ்துமா நோயாளிகளுக்கு உதவும் வகையில் காற்றில் உள்ள மாசுகளின் அளவை துல்லியமாக கண்டறிந்து முன்கூட்டியே தெரிவிக்கும் வகையில் புதிய தொழில்நுட்ப சாதனத்தை அவர்கள் வடிவமைத்து சமர்ப்பித்தனர். இந்த புதிய தொழில்நுட்பத்துக்கு முதல் பரிசாக, 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை வழங்கி கே.எஸ்.பல்கலைக்கழகம் கவுரவப்படுத்தியுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்