மதுவுக்கு எதிரான ஊர்வலம் - பார்வையாளர்களை கவர்ந்த எமன் வேடம்

மது அருந்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும், அதற்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை மூலம் கடலூரில் ஊர்வலம் நடைபெற்றது.

Update: 2019-01-09 11:39 GMT
மது அருந்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும், அதற்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை மூலம்  கடலூரில்  ஊர்வலம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித் தலைவர் அன்புச்செல்வன்  தொடங்கி வைத்த  இந்த பேரணியில்,  பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு, மதுவுக்கு எதிரான பதாகைகளை ஏந்திச் சென்றதுடன்,  எமதர்மன் வேடமணிந்த ஒருவர்,  சாராயம் குடிப்பவரை அடிப்பது போன்று  நடித்து  வந்ததும் பார்வையாளர்களை  வெகுவாக கவர்ந்தது. பேரணியில் மதுவினால் ஏற்படும் தீங்குகள் குறித்து துண்டு பிரசுரங்களும் விநியோகம் செய்யப்பட்டன.
Tags:    

மேலும் செய்திகள்