சிலை கடத்தல் வழக்கு - ரன்வீர் ஷாவுக்கு முன்ஜாமீன்

சிலைகள் கடத்திய வழக்கில் தொழிலதிபர் ரன்வீர் ஷாவுக்கு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் அளித்ததையடுத்து திருச்சியில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் ஆஜராகி கையெழுத்திட்டார்.

Update: 2019-01-05 07:31 GMT
சிலைகள் கடத்திய வழக்கில் தொழிலதிபர் ரன்வீர் ஷாவுக்கு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் அளித்ததையடுத்து திருச்சியில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் ஆஜராகி கையெழுத்திட்டார். ரன்வீர் ஷாவுக்கு சொந்தமான இடங்களிலும், சென்னையில் கிரண் ராவின் போயஸ் கார்டன் வீட்டிலும், சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் நடத்திய சோதனையில் ஏராளமான பழமையான சிலைகளை கைப்பற்றப்பட்டன. இதையடுத்து, இவர்கள் இருவருக்கும் சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. அதன்படி, திருச்சியில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் நேற்று கிரண்ராவ் ஆஜராகி கையெழுத்திட்டார். இன்று ரன்வீர்ஷா ஆஜராகி  டி.எஸ்.பி சந்திரசேகர் முன்னிலையில் கையெழுத்திட்டார்.
Tags:    

மேலும் செய்திகள்