காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற வழக்கறிஞர்கள்...

வழக்கறிஞர் மீது தாக்குதல் நடத்திய காவல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி விழுப்புரத்தில் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-01-04 10:32 GMT
விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி மற்றும் எஸ்ஐ ஆகிய இருவர் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பேவலை தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த நிகழ்வை கண்டித்து, இன்றைய தினம் விழுப்புரம் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தை வழக்கறிஞர்கள் முற்றுகையிட முயன்றனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்த முயன்ற போது, இரு தரப்பினரிடையே மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டது. வழக்கறிஞர் பேவலை தாக்கிய டிஎஸ்பி மற்றும் எஸ்ஐ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தின் போது அவர்கள் வலியுறுத்தினர். தகவல் அறிந்து அங்கு வந்த விழுப்புரம் சரக டிஐஜி சந்தோஷ் குமார், உயர் அதிகாரிகள் இடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுத்தியளித்து அடுத்து முற்றுகை போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது. 
Tags:    

மேலும் செய்திகள்