தெப்பகுளத்தில் மிதக்கும் பிளாஸ்டிக் குப்பைகள்: அகற்றி தூய்மைப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை

தூத்துக்குடி தெப்பகுளத்தில் மிதக்கும் பிளாஸ்டிக் பொருட்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;

Update: 2019-01-04 06:41 GMT
தூத்துக்குடி தெப்பகுளத்தில் மிதக்கும் பிளாஸ்டிக் பொருட்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அங்குள்ள சிவன்கோவில் தெப்பகுளத்தில், தூக்கி எறியப்படும் வாட்டர் பாட்டில் உள்ளிட்ட பிளாஸ்டிக் குப்பைகள் மிதப்பதால்,  சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் குளத்தில் உள்ள பிளாஸ்டிக் குப்பைகளை உடனடியாக அகற்றி, அதை தூய்மைப்படுத்தும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று மாநகராட்சி நிர்வாகத்துக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்