காமாட்சியை தரிசனம் செய்தது என் பாக்கியம் - அஸ்ஸாம் ஆளுநர் ஜகதீஷ் முகி பெருமிதம்
காஞ்சிபுரம் வந்து காமாட்சி அம்மனை தரிசனம் செய்ததை பாக்யமாகவும், அதிர்ஷ்டஷாலியாகவும் கருதுகிறேன் என்று அஸ்ஸாம் ஆளுநர் ஜகதீஷ் முகி பெருமிதம் தெரிவித்துள்ளார்.;
காஞ்சிபுரம் வந்து காமாட்சி அம்மனை தரிசனம் செய்ததை பாக்யமாகவும், அதிர்ஷ்டஷாலியாகவும் கருதுகிறேன் என்று அஸ்ஸாம் ஆளுநர் ஜகதீஷ் முகி பெருமிதம் தெரிவித்துள்ளார். தமிழகத்துக்கு குடும்பத்துடன் சுற்றுலா வந்த அவர், காஞ்சிபுரம் கோயிலில் சாமி தரிசனம் செய்த பின் செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார். கோயில் நிர்வாகம் கோயிலை மிகவும் தூய்மையாக வைத்திருப்பதாக கூறிய அவர், நிர்வாகத்துக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்.