சென்னையில் விடிய விடிய வாகன சோதனை
மெரினா, அடையார், மந்தைவெளி, அண்ணாசாலை என பல்வேறு பகுதிகளில், வாகனங்களை நிறுத்தி நேற்று இரவு விடிய விடிய போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.;
இதற்கிடையே, 2019 ஆங்கில புத்தாண்டு நெருங்குவதையொட்டி, சென்னை முழுவதும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மெரினா, அடையார், மந்தைவெளி, அண்ணாசாலை என பல்வேறு பகுதிகளில், வாகனங்களை நிறுத்தி நேற்று இரவு விடிய விடிய போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். வாகனங்களின் ஆவணங்களைப் பரிசோதித்த பின்னரே, வாகன ஓட்டிகளை செல்ல அனுமதித்தனர். புத்தாண்டையொட்டி அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கவும், சென்னையில் இளைஞர்கள் பைக் ரேசிங்கில் ஈடுபடுவதை கட்டுப்படுத்தவும் இந்த சோதனை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.