புத்தாண்டு கொண்டாட்டம் - தீவிர கண்காணிப்பு

ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி சென்னையில் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.;

Update: 2018-12-30 05:07 GMT
2019 ஆங்கில புத்தாண்டு நாளை மறுநாள் பிறப்பதையொட்டி சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட பல இடங்களில் கொண்டாட்டங்களுக்கு சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நாளை நள்ளிரவு புத்தாண்டை வரவேற்க மக்கள் தயாராகி வருகின்றனர். 
சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை இரவு 10 மணி முதல் மெரினா கடற்கரை சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது. கடற்கரை சாலை உள்ளிட்ட பல இடங்களில் நாளை இரவு 10 மணி முதல் மறுநாள் அதிகாலை 4 வரை வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆங்கில புத்தாண்டை கொண்டாட மெரினா கடற்கரைக்கு வருபவர்கள் வாகனங்களை நிறுத்த ராணிமேரி கல்லூரி உள்ளிட்ட பல இடங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக  போலீசார் தெரிவித்துள்ளனர். புத்தாண்டையொட்டி போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்